அஞ்சலி பினான்ஸ்சின் இலகுவான வங்கிக்கடன் வழங்கும் திட்டம்

1. வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்கும் முறை

வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உங்களின் வதிவிட அனுமதிப்பத்திரத்தின் பிரதியொன்றையும் (B,C & CH-Nationality) மற்றும் கடைசி மாத சம்பளப்பட்டியலையுமினைத்து எமக்கு பக்ஸ்(FAX) அல்லது தபால் (POST) மூலம் அனுப்பி வைக்கவும். (குறிப்பு: மாதச் சம்பளமாயின் ஒரு மாதச் சம்;பளப்பட்டியல், மணித்தியாளச் சம்பளமாயின் கடந்த மூன்று மாதச் சம்பளப்பட்டியல்).

2. வங்கிக்கடனாக பெறவிரும்பும் தொகை

வங்கிக்கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் நீங்கள் கடனாக பெறவிரும்பும் தொகையை எம்மிடம் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரியப்படுத்தும் நிலையில் அஞ்சலி பினான்ஸ்; உங்களின் சம்பளத்திற்கு ஏற்ற வகையில் மிகக்கூடுதலான வங்கிக்கடனை பெற்றுத்தர ஏற்பாடு செய்யும். (குறிப்பாக அஞ்சலி பினான்ஸ் இன்று வரை தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சம்பளத்திற்கு எவ்வளவு மிகக்கூடுதலான வங்கிக்கடன் பெறமுடியுமோ அத்தொகையையே பெற்றுக்கொடுத்துள்ளது).

3. வட்டிவீதம்

சுவிஸ்சில் வங்கிக்கடன் வழங்கும் வங்கிகளின் வட்டிவீதங்கள்  8.95% முதல் 9.95% வரை ஆகும் ,இவ்வட்டிவீதங்களுக்கும் குறைவாக விளம்பரம் செய்யும் முகவர்களிடம் தயவு செய்து உங்கள் வங்கிக்கடன் விண்ணப்ப பத்திரங்களை கொடுப்பதற்கு முன்னர் வட்டிவீதத்தை உறுதி செய்து கொள்ளவும். மேல் குறிப்பிட்ட வட்டிவீதங்கள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு அஞ்சலி பினான்ஸ்சுடன் தொடர்பு கொள்ளவும்.

4. வங்கிக்கடனை புதுப்பித்தல்

நீங்கள் முன்னர் எம்மிடம் வங்கிக்கடன் பெற்று சில மாதங்கள் செலுத்தியிருந்தால் அக்கடனை மீண்டும் புதுப்பித்து மேலதிக வங்கிக்கடனை பெற்றுக் கொள்ளலாம் அல்லது நீங்கள் வேறு யாரிடமும் வங்கிக்கடனுக்கு விண்ணபித்து நீங்கள் எதிர்பார்த்த தொகை கிடைக்காத நிலை ஏற்பட்டிருந்தால், உதாரணமாக உங்கள் வருமானத்திற்கு ஏற்ற வகையில் நீங்கள் விண்ணபித்த வங்கி உங்களுக்கு மிகக்கூடுதலான வங்கிக்கடனை வழங்க முன்வராத நிலையில் நீங்கள் அக்கடனை அஞ்சலி பினான்ஸ்சின் மூலம் புதுப்பித்து மேலதிக பணத்தை பெறுதல் அல்லது வங்கிக்கடனை மீளப்புதுப்பித்தல் பற்றி ஆலோசனை கேட்டல்.

இப்படிக்கு

அஞ்சலி பினான்ஸ் நிர்வாகம்.